எனக்கு எதிராக சதி நடக்கிறது: ஏ.ஆர்.ரஹ்மான் ஆதங்கம்

Share

பாலிவுட்டில் எனக்கு எதிராக சிலர் செயல்படுகிறார்கள் என்று இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தோனி புகழ் மறைந்த சுஷாந்த் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் தில் பெசாரா. இந்த திரைப்படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இவரின் இசையில் பாலிவுட் திரைப்படம் ஒன்று வெளியானதில் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஹ்மான், பாலிவுட்டில் தான் வேலை செய்ய கூடாது என்று சிலர் நினைப்பதாகவும், எனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்த படத்தின் இயக்குநரிடம் கூட ரஹ்மானிடம் சென்றால் பாடல் இசையமைத்து தர நீண்ட நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளார்கள். எனக்கு இறைவன் மீது நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


Share

Related posts

இலங்கை தாதா கோவையில் உயிரிழப்பு: இச்சம்பவம் குறித்து விசாரிக்க 7 தனிப்படைகள் அமைப்பு…

Admin

சீமான் ட்வீட் | சமூகநீதி காத்த அனைவருக்கும் நன்றி

Admin

நீரவ் மோடி,மெகுல் சோக்சி விற்றது போலி வைரமா???

Admin

Leave a Comment