மத்திய அரசின் சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு வரைவிற்கு எதிராக குரல்கள் எழுந்து வரும் நிலையில் நடிகர் கார்த்தி இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் கார்த்தி நடத்தி வரும் உழவன் ஃபவுண்டேசன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்ட வரைவு சுற்றுசூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது போல இருப்பதாக குறிப்பிட்ட கார்த்திக்.

இந்தியாவின் இயற்கை வளங்கள், மலைகள், காடுகள் ஆகியவற்றை அழிக்க அரசே அனுமதிக்க கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார், ஆய்வாளர்கள் மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்த்து புதிய வரைவு கொண்டு வர வேண்டும் எனவும் அறக்கட்டளை சார்பாக கார்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.