சிம்பு நடித்துவரும் மாநாடு படம் சமூகவலைத்தளத்தில் அடிக்கடி ட்ராப் ஆகிவிட்டதாக சில வதந்திகள் வெளிவருகிறது. இதை கேட்டு படத்தின் தயரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடும் கோபத்தில் உள்ளார். இதனால் கடும் கோபத்தில் இருக்கும் சுரேஷ் காமாட்சி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில் இதுபோன்ற அறிக்கையை நான் இல்லை. தயவுசெய்து ஒரு செய்தியை வெளியிடும் முன் தயாரிப்பாளர்களிடம் உறுதி செய்துகொண்டு வெளியிடுங்கள் ‘மாநாடு’ டிராப் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே தயவுசெய்து இதுபோன்ற வேலையை நிறுத்துங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
சுரேஷ்காமாட்சியின் இந்த விளக்கத்தை அடுத்து ‘மாநாடு’ திரைப்படம் டிராப் ஆகாது என்பது தற்போது உறுதியாகியுள்ளது. மேலும் தான் நான் பொதுவாக மீடியாவை மதிக்கும் பழக்கம் உடையவன். ஆனால் இதுபோன்ற பொய்யான செய்தி வருத்தப்பட வைக்கின்றது. மீண்டும் இப்படி நடந்தால் நான் மீடியாவை சும்மா விடமாட்டேன் என கூறியுள்ளார்.