கொரோனாவிலிருந்து குணமானதும் பிளாஸ்மா தானம் செய்வோம்-ராஜ்மெளலி ட்விட்டர் பதிவு

Share

கொரோனா பாதிப்பு இந்தியாவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்,பொதுமக்கள் மக்கள் தொடங்கி, அரசியல் கட்சித் தலைவரகள், சினிமா துறையைச் சேர்ந்த ஆளுமைகளும் என பலருக்கும் கொரோனா தொற்றின் பாதிப்புகளை சந்தித்துத் வருகின்றனர்.

இந்நிலையில், பாகுபலி இயக்குநர் ராஜமெளலிக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,இது தொடர்பாக ராஜமெளலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சில நாட்களாக எனக்கும் என் குடும்பத்தினருக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் அது தானாகவே சரியாகிவிட்டாலும், குடும்பத்தோடு பரிசோதனை செய்து கொண்டோம்.

பரிசோதனை முடிவில் மிதமான கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி நாங்கள் எங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்.எந்த அறிகுறியும் இல்லாமல் நாங்கள் நன்றாக உள்ளோம். நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும், எங்கள் பிளாஸ்மாவை தானம் செய்து ஆன்டிபாடிகளை உருவாக்க காத்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

ஹல்க்காக மாறிப்போன:நடிகர் சதிஷ்..

Admin

பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த கட்டம்

Admin

தோனியின் திருமண நாளை ரசிகார்கள் சிறப்பாக கொண்டாடினர்

Admin

Leave a Comment