ரிஷிவந்தியத்தைச் சேர்ந்த பாலா, விஜய்யின் தீவிர ரசிகர். கடந்த சில மாதமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த பாலா, தற்கொலை செய்துகொண்டுள்ளார். இறப்பதற்கு முன்னதாக, தலைவன் படம் பார்க்காமலே போகிறேன், என்று ட்வீட் வெளியிட்டிருந்தார்.
இவரின் மரணத்துக்கு நடிகர்கள் ஷாந்தனு, சஞ்சீவ் எனப் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தார்கள்.இந்நிலையில் பாலாவின் குடும்பத்துக்குத் தொலைபேசி மூலமாக ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் விஜய். பாலாவின் உறவினர்களோடு, கால் மணி நேரத்துக்கும் மேலாகப் பேசி ஆறுதல் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன..