பிக் பாஸ் நிகழ்ச்சியில்வரவேற்பைப் பெற்ற ஓவியா தனது ட்விட்டர் பதிவின் மூலம் ரசிகர்களுக்கு கேள்விகளுக்குப் பதிலளித்து வருகிறார் அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா?” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார் ஓவியா.
இந்த ட்வீட்க்கு பதில்,அளித்த ஒருவர் ஆம். தடை செய்ய வேண்டும் என பதிலளித்தார். அவருக்குப் பதிலளித்தஓவியா நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் வரை டிஆர்பிக்காக அவர்களைச் சித்ரவதை செய்யாமல் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். அண்மையில் பிக் பாஸ் சீசன் 4 தொடங்கும் என தகவல் வெளியானது.