தமிழகத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அடுத்த 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வரும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படும்” என்று தெரிவித்தார்.
“அந்த 5 நாள்களில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றனவா என்பதை கவனிக்க பிளாக்லெவல் வட்ட வாரியாக அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள்” என்றும் தெரிவித்தார்.
முன்னதாக ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய மனுக்கள் அனைத்தயும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ,அமைச்சரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
2021 வரை பள்ளிகள் திறப்பு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு