தலிபான் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய 15 வயது சிறுமி

Share

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தலிபான் அரசுக்கு ஆதரவாகவும் அரசு படையினருக்கு ரகசிய தகவல் வழங்கும் தலிபான் பயங்கரவாதிகள் ஈவு இரக்கமின்றி கொலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணம் தைவாரா மாவட்டம் கிர்வா கிராமத் தலைவராக இருந்தவரை தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். 15 வயது சிறுமி கோமர் குலின் கண்முன்னே தந்தை மற்றும் தாயை சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த கோமர் வீட்டிற்குள் தன் தந்தை பாதுகாப்பாக வைத்திருந்த ஏ கே 47 நவீன ரக துப்பாக்கியை எடுத்து வாசலில் நின்றிருந்த தலிபான்களை கண்மூடித்தமாக துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் வாசலில் நின்றுகொண்டிருந்த இரண்டு தலிபான்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து அவரிடமிருந்து துப்பாக்கியை வாங்கிய அவரின் சகோதரர் பெற்றோர் உயிரிழப்புக்கு காரணமான தலிபான்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினார் இந்த தாக்குதலில் அதிர்ச்சியடைந்த எஞ்சிய தலிபான்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓடினர்.

தந்தை மற்றும் தாயை இழந்த போதிலும் அவர்கள் உயிரிழக்க காரணமான பயங்கரவாதிகளை கொன்று கோமர் சற்று ஆறுதல் தேடியுள்ளார். தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக தைரியமாக துப்பாக்கி சூடு நடத்திய 15 வயது சிறுமி கோமர் குல்-க்கு அந்நாட்டு அதிபர் உட்பட அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தலிபான் பயங்கரவாதிகளை எதிர்த்து மேலும் சண்டையிட தான் தயாராக உள்ளதாக கோமர் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

வைரலான வீடியோ வழக்கு பதிவு செய்த காவல்துறை

Admin

நியூசிலாந்தில்பரவத் தொடங்கிய கொரோனா..

Admin

ரூ.2 கோடியில் பிளாஸ்மா வங்கி: அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

Admin

Leave a Comment