அரியானா மாநிலத்தின் குருக்க்ஷேத்ரா பகுதியில் ராஜ்குமார். என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். கொரோனா பரவல் காரணமாக தனது டீக்கடையை மூட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். தனது கடையினை,மீண்டும் திறக்க ரூ. 50 ஆயிரம் கடன் கேட்டு வங்கி ஒன்றிற்கு விண்ணப்பித்திருந்தார்.

அவரது ஆவணங்களை சரி பார்த்த வங்கி துறை அதிகாரிகள், நீங்கள் ஏற்கனவே வங்கியில் ரூ. 51 கோடி கடன் வாங்கியுள்ளீர்கள். உங்களுக்கு அது தெரியாதா?, இப்போது மேலும் கடன் கேட்டால் எப்படி தரமுடியும்?. முதலில் ரூ. 51 கோடி கடன் பாக்கியை கட்டுங்கள் எனக் கூறி ராஜ்குமாருக்கு அதிர்ச்சிஅளித்துள்ளனர். சாதாரண டீக்கடை வைத்துள்ள நான் இதுவரை எந்த வங்கியிலும் கடன் வாங்கியது இல்லை அப்படியிருக்க எப்படி ரூ. 51 கோடி வங்கி கடன் வாங்கினேன் என எனக்கே தெரியவில்லை என்றார்.