தங்கைக்காக 90 தையல்கள்: சிறுவனுக்கு ஷீல்டை அனுப்பிய கேப்டன் அமெரிக்கா

Share

அமெரிக்காவில் 4 வயது தங்கையை காப்பாற்ற நாயிடம் போராடிய சிறுவனின் முகத்தில் 90 தையல்கள் போடப்பட்டுள்ளன. தங்கையை உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றியதற்காக, சிறுவனுக்கு உலகம் முழுவதுமிருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

வியோமின் மாகாணத்திலுள்ள Cheyenne நகரில் கடந்த ஜூலை 9 – ந் தேதி தெருவில் நடந்து கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று கடிக்க பாய்ந்துள்ளது. இந்த சமயத்தில் குறுக்கே பாய்ந்த சிறுமியின் சகோதரன் பிரிட்ஜர் வாக்கர் நாயுடன் போராடி தங்கையை காப்பாற்றியுள்ளான் ஆனால், இந்த போராட்டத்தில் சிறுவனின் முகத்தில் நாய் பல முறை கடித்து விட்டது.

இருந்தாலும் கடைசி வரை போராடிய சிறுவன் தன் தங்கையை நாயிடத்தில் இருந்து மீட்டெடுத்தான்.உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. முகத்தில் 90 தையல்கள் போடப்பட்டன. தீவிர சிகிச்சை காரணமாக சிறுவன் உயிர் பிழைத்து வீடு திரும்பினான்.

சிறுவனின் சொயல் வைரலனதையடுத்து,  பல பிரபலங்கள் சிறுவனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர். அவெஞ்சர்  நாயகன் கிறிஸ் இவான்ஸ் சிறுவனுக்கு அனுப்பிய வீடியோ மெசெஜில் . ‘உன்னைப் போன்ற ஒருவனை சகோதரனாக அடைய உன் தங்கை கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

உன்னை பெற்றதற்காக உன் பெற்றோர் பெருமையடைவார்கள். என்னிடத்திலுள்ள கேப்டன் ஆஃப் அமெரிக்கா ஷீல்டை உனக்கு உறுதியாக அனுப்பி வைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் ஹாலிவுட் பிரபலங்களும் சிறுவனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


Share

Related posts

பிளஸ் 2 மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு…

Admin

2021 ல் கொரோனா தடுப்பூசி ரெடியாயிடும்: அதிபர் டிரம்ப்

Admin

2021 க்குள் கொரோனா முடிவுக்கு வந்து விடும் : பில்கேட்ஸ்

Admin

Leave a Comment