நடிகர் விஷாலும் அரசியல் கட்சி தொடங்கிடுவார் போல!!!

Share

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். கடந்த சில நாட்களாகவே நடிகர் விஷாலின் பெயர் ஏதாவது ஒரு செய்தியில் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

துப்பறிவாளன் இயக்குநர் மிஷ்கின் உடனான பிரச்சனை சினிமாவட்டாரத்தில் பூதகரமாக வெடித்தது. அந்த பிரச்சினை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் விஷாலின் பெயர் சிக்கியிருக்கிறது.ஆம் கல்விக்கண் திறந்த காமராஜரின் 118ஆவது பிறந்த விழா நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நடிகர் விஷால் காமராஜர் குறித்து டிவிட்டர் பதிவை முதலில் பதிவிட்டார். தன்னுடைய முதல் பதிவில் உங்களைப் போன்று யாராவது ஒருவரை எதிர்காலத்தில் பார்ப்போமா என்று பதிவிட்டிருந்தார் விஷால்.பிறகு அதனை நீக்கிவிட்டு மதிய உணவு திட்டத்தைக் கொண்டுவந்த மனிதர்.. இன்றுவரை நாங்கள் உங்களை மிஸ் பண்றோம்.. பிறந்த நாள் வாழ்த்துகள் அய்யா என பதிவிட்டுள்ளார். ஆனாலும் நடிகர் விஷாலின் முதல் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. விஷால் தன்னுடைய முதல் பதிவில் நடப்பு அரசியலை வைத்து ஏதோ சொல்ல வந்துள்ளார் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.


Share

Related posts

அமெரிக்காவுக்கு சரிவு அமேசானுக்கு அள்ளுது வருமானம்.

Admin

லிங்காஷ்டகம்…

Admin

கொரோனா சோதனையில் இந்தியா இரண்டாம்இடம்: அதிபர் டிரம்ப்

Admin

Leave a Comment