நடிகை ஐஸ்வர்யா ராயும் அவருடைய எட்டு வயது மகள் ஆராதயாவும் நேற்று மாலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 5 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.
ஆனால் பாதிப்பு குறையாததையடுத்து இருவருக்கும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனைக்கு வந்து அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐஸ்வர்யா ராயும் ஆராதயாவும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.