தளபதி விஜய், நடிகை காஜல் அகர்வால் இருவரும் முதன் முறையாக ஜோடி சேர்ந்த படம் துப்பாக்கி. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வெளியிட்ட , இந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிகை அக்ஷரா கவுடா நடித்திருந்தார்.
கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட இவர் இந்தி, கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்த இந்நிலையில் ஆரம்பம் படத்தில் அஜித்துடன் நடித்தது குறித்தும் விஜயுடன் துப்பாக்கியில் நடித்தது குறித்தும் அவர் தனது பேட்டியில் அதில் தான் நடித்த காதாபாத்திரங்களில் இதில் ஏன் நடித்தோம் என வருத்தபட செய்த படம் தூப்பாக்கி தான் என தெரிவித்துள்ளார்.

படத்தில் நடிகர் ஜெயராம் நடிகர் விஜய்க்கு அறிமுகப்படுத்தி திருமணம் செய்து கொள்ளுமாறு கூறுவார். அதற்கு நடிகை காஜல் அகர்வால், அவர் அடல்ட் வெப்சைட்களுக்கு வேலை பார்ப்பதாக கூறுவார். இதுதான் அக்ஷரா நடித்த ரோல், இதற்காகதான் வருத்தப்படுவதாக கூறியுள்ளார் ஆனால் தளபதி விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன் இவர்களுடன் வேலை செய்தது மிகவும் மனம் நிறைவான மகிழ்ச்சியான தருணம் என்று தெரிவித்தார்.குறிப்பாக விஜயினையும் அவரின் நடிப்பையும் கண்டு அசந்து போனதாகவும் தெரிவித்துள்ளார்