கேரளாவில் பார்வையற்ற ஒருவர் பேருந்தை பிடிக்க தடுமாறி சென்றுள்ளார். இதனை பார்த்த கேரளா பெண் ஒருவர் ஓடிச்சென்று புறப்பட இருந்த பேருந்து நடத்து நரிடம் நிறுத்த சொல்லி பார்வையற்ற அவரை பொருமையாக பேருந்தில் ஏற உதவினார்.
இந்த மனிதாபிமானமிக்க செயல் விடியோவாக சமூக வலைதலங்களில் வைராலாக பாரவியது. இந்த பெண்ணின் பெயர் சுப்பிரியா, அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. அவர் கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுந்து வரும் நிலையில், இவர் ஆலுக்காஸ் நிறுவானத்தில் பணியாளராக உள்ளார். இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுப்பிரியாவின் இந்த செயல்பாடுகளுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வந்த நிலையில் ஆலுகாஸ் நிறுவனத் தலைவரான ஜாய் ஆலுக்காஸ் சுப்பிரியாவின் வீட்டுக்கே சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறும் கூறியுள்ளார். இதனையடுத்து ஆலுகாஸ் நிறுவன தலைவரை நேரில் சந்தித்த சுப்பிரியாவுக்கு பெரும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அது என்ன என்றால் சுப்பிரியாவின் மனிதாபிமான செயலை கண்ட நிறுவன தலைவர் சுப்பிரியாவுக்கு புது வீடு ஒன்றை பரிசாக தருவதாக தெரிவித்துள்ளார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த சுப்பிரியா, நான் சாதரணமாக செய்த உதவிக்கு இவ்வளவு பெரிய வெகுமதி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கவில்லை என்றும், வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.