அமர்நாத் கபனிலிங்க தரிசன யாத்திரை இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக ஜம்மு காஷ்மீர் மாநில அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்ட தகவலின்படி தற்போதுஉள்ள சூழ்நிலையில் இந்த வருடம் அமர்நாத் யாத்திரை பயணம் சரியாக இருக்காது என்று கோயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதனால் இந்தாண்டு அமர்நாத் பனிலிங்க தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் இதற்காக வருந்துவ்தாகவும் ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது