ராம ஜென்ம பூமி: உலகிலேயே 3ஆவது பெரிய கோயில் அயோத்தியில்தான்

அயோத்தி
Share

இந்தியாவில் பென்னெடுங்காலமாக் நீடித்து வந்த பிரச்சினைகளில் ஒன்று அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கு. இதற்கு உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியதையடுத்து ராமர்கோயில் கட்டும் பணிகள் தொடங்கின.

இந்தக் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு தலைமை தாங்க பிரதமர் மோடி அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவிப்பதன்படி, உலகிலேயே மூன்றாவது பெரிய ஆலயமாக அயோத்தி ராமர் கோயில் அமையவிருப்பதாகத் தெரிகிறது.

சுமார் 268 முதல் 280 அடி நீளமும், 140 முதல் 280 அடி அகலமும், 161 அடி உயரமும் கொண்டு அமையவிருக்கும் இந்த அயோத்தி ராமர் கோயில் உலகிலேயே மூன்றாவது பெரிய ஆலயம் என்று அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.

கோயிலின் கட்டுமானத்தில், முன்பு மூன்று குவிமாடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. தற்போது ஐந்து குவிமாடங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோயிலின் பரப்பளவு 76,000 முதல் 84,000 சதுர அடியாக இருக்கும். முன்பு 38,000 சதுர அடி என்று கணக்கிடப்பட்டு இருந்தது.


Share

Related posts

40 வருடத்திற்கு பிறகு கிடைத்த கின்னஸ் சான்றிதழ்

Admin

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை…

Admin

பப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம்

Admin

Leave a Comment