அல்லி நகரம் முதல் இயக்குநர் இமயம் வரை: பாரதிராஜா

Share

அல்லிநகரத்தில் பிறந்த பாரதிராஜா உடன் பிறந்தவர்கள், அக்கா இரண்டு பேர், அண்ணன்கள் இருவர், ஒரு தம்பி, ஒரு தங்கை எனப் பெரிய குடும்பம். பெரிய மாயத்தேவர் கருத்தம்மாவின் ஜந்தாவது வாரிசுதான் பாரதி ராஜா

சினிமாவுக்கு வருவதற்கு முன் ஊர் சிரிக்கிறதுஅதிகாரம்சும்மா ஒரு கதை’ என நாடகங்கள் எழுதி திருவிழா காலங்களில் இயக்கி நடித்திருக்கிறார். பிறகு தான், புட்டண்ணா கனகலிடம் சினிமா கற்றார்.

சென்னையில் ஆரம்பத்தில் சேர்ந்து தங்கியிருந்த நண்பர்கள் இளையராஜா, கங்கை அமரன், ஆர்.செல்வராஜ், கச்சேரித் தெருவில் சிறு வீட்டில் இருந்துதான் இவர்களின் பயணம் தொடங்கியது. இப்பவும் கூடிப் பேசினால் அவர்களின் அனுபவங்களை அசைப் போடுவார்களாம்

பாரதிராஜா அறிமுகப்படுத்திய புதுமுகங்கள், பாக்யராஜ், ராதிகா, விஜயன், நிழல்கள் ரவி, கார்த்திக் ராதா, ரேவதி,பாபு, நெப்போலியன், ரஞ்சிதா என சினிமாவில் ஆதிக்கம் செய்தவர்களின் வரலாறும் நீள்கிறது

சுடச்சுட சமைத்த நாட்டுக் கோழிக் குழம்புக்கு பாரதிராஜா அடிமை. விடுமுறை நாட்களில் நண்பர்களை அழைத்து விருந்து வைப்பாராம்

·பாரதிராஜாவின் திரையுலக சாதனையினை போற்றும் வகையில் தேசிய விருது, தமிழக அரசு விருது, ஆந்திர அரசு விருது, பத்மஸ்ரீ, கலைமாமணி, டாக்டர் பட்டம் என பல விருதுகளை வாங்கி இருக்கிறார் இந்த அல்லி நகரத்துகாரர்

·பாரதிராஜாவுக்கு பிடித்த நடிகர் சிவாஜி, இன்றைக்கும் வெளியிட்டால் பரபரப்பாக ஓடுகிற படமாக `16 வயதினிலே இருக்கும்

·மனைவி சந்திரலீலா, மாமன் மகள்தான், மனோஜ் கே.பாரதி, ஜனனி ஜ்ஸ்வர்யா என இரண்டு குழந்தைகள்.

·பாரதிராஜாவின் படங்களில் அவருக்கே பிடித்தது 16 வயதினிலேமுதல் மரியாதைவேதம் புதிதுஆத்ம திருப்தியாகப் பிடித்ததுகாதல் ஓவியம்

பாரதிராஜாவின் படங்களில் வெள்ளை உடை தரித்த பெண், சூர்யாகாந்திப் பூ, மலை அருவி, செம்மண், மாட்டு வண்டி, ஒற்றைப் பள்ளிக்கூடம், அதில் ஒற்றை வாத்தியார் கண்டிப்பாக இருப்பார்கள்

·புலிகள் தலைவர் பிரபாகரனுக்குப் பிடித்த இயக்குநர் பாரதிராஜா, ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றை பாரதிராஜாவால் எடுக்க முடியும் என்று நம்பினார் பிரபாகரன். அதை இயக்குநரிடம் கேட்கவும் செய்தார். பாரதிராஜாவும் சம்மதம் சொன்னதாக தகவல்

·பாரதிராஜா எப்பவும் விரும்புகிற உடை டி-ஷாட், ஜீன்ஸ் பேண்ட் சமீப காலமாக வெள்ளை ஜிப்பாவை இணைத்துள்ளார்

ரஷ்யா , அமெரிக்கா போன்ற நாடுகளில் சிறப்பு விருந்தினராக சென்று,அங்கு சினிமாபற்றி வகுப்பு எடுத்துவந்திருக்கிறார் அல்லிநகரம் பாரதிராஜா!

குற்றப் பரம்பரை,அப்பனும் ஆத்தாளும் என இரு படங்களின் திரைக்கதையை வடிவமைக்கிற வேலையில் தீவிரமாக இருக்கிறார். அநேகமாக அவரே பெரிய கேரக்டரில் நடித்துவிடுவார் எனப் பேசிக் கொள்கிறார்கள்!

·அதிகம் வெளியில் தெரியாத விஷயம், சிறப்பாக ஓவியம் வரைவார். அதை நெருக்கமான நண்பர்களிடம் காட்டி மகிழ்வார். காட்சி அமைப்புகளை வரைந்துவைத்துக்கொள்கிற அளவுக்கு அவரது ஓவியம் நுட்பமானது!

·1991 –ல் சிக்ரெட் புகைப்பதை நிறுத்தினார் பாரதிராஜா. நுரையீரல் பாதிக்கப்பட்டு. சிறு ஆபரேஷன் வரைக்கும் போனதுதான் அதற்குக் காரணம். இப்போது அவரது உலகத்தில் புகை இல்லை

·மத்திய அரசு, இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக எதுவும் செய்யவில்லை என்று, தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதைத் திருப்பி அனுப்பினார் குடியரசுத் தலைவர் பிரதிபாபாட்டீலும் அதைப் பெற்றுக் கொண்டு,ஒப்புதல்பெற்று கடிதம் எழுதினார்!

· 1986 –ல் தாஷ்கண்ட் படவிழாவில் `முதல் மரியாதை திரைப்படத்தை திரையிட்டார்கள். சப்டைட்டில் போட்டும் அந்தப் படத்தைப் புரிந்துகொள்ள சிரமப்பட்டார்கள் மக்கள். விழாவுக்குப் போயிருந்த ராஜ்கபூர், ரஷ்ய மொழியில் முழுக்க முழுக்க ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்தார். பாராட்டினர் மக்கள். கண்கள் நனைந்தது பாரதிராஜாவுக்கு

·கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெ., என மூன்று முதல்வர்களிடமும் நெருங்கிய பழகியவர். எம்.ஜி.ஆர் அன்புடன் அழைப்பது வாங்க டைரக்டரே கலைஞர்என்னப்பா பாரதிஎன்றும் ஜெயலலிதா மிஸ்டர் பாரதிராஜா என்றும் அழைப்பார்களாம்
·
16 வயதினிலே’ வில் ஆரம்பித்து `புதிய வார்ப்புக்கள்’ வரை பார்த்துவிட்டு எல்.வி.பிரசாத் தன்னை உதவி இயக்குநராக சேர்த்துகொள்ள முடியுமா என்று கேட்டதைத் தனது உச்சபட்ச கெளரவமாக எடுத்துக்கொள்வதாகச் சொல்வார் பாரதிராஜா

·தன் அம்மாவின் பெயரில் எடுத்த `கருத்தம்மா’ படத்துக்கு தேசிய விருது கிடைத்தபோது, தன் தாயாரையே விருது வாங்கச் செய்தார் பாரதிராஜா. அந்தத் தாய் பெருமிதப்பட்டு மேடையிலேயே உணர்ச்சி வசப்பட்டது அருமையான நிகழ்வு!

·நினைத்தால் தேனிக்குப் போய் அம்மா சமாதியில் உட்கார்ந்து தியானத்தில் இறங்கிவிடுவார் பாரதிராஜா. `அம்மா என்னை சின்ன வயதில் குளிக்கவெச்சு சாப்பாட்டு ஊட்டிவிட்டது அதையே அம்மா படுக்கையிலே கிடந்தபோது… நான் செய்து பெற்ற கடனை நிறைவேற்றினேன்’ என நெகிழ்வார் பாரதிராஜா


Share

Related posts

இனி வீடு தேடி வரும் ரேஷன் – கெஜ்ரிவால் அதிரடி

Admin

வடகொரியாவில் பரவிய கொரோனா வைரஸ்

Admin

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு: 60 பேர் பலி

Admin

Leave a Comment