கொரோனா பரவல் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வருபவர்கள் இ-பாஸ் எடுத்துதான் வரவேண்டும். இந்நிலையில் நடிகர் பரோட்டா சூரி மற்றும் விமல் ஆகியோர் கடந்த வாரம், கொடைக்கானல் வந்து தங்கிய பின்பு வனத்துறை அலுவலர்களின் உதவியுடன் தடை செய்யப்பட்ட பகுதிக்குச் சென்று அங்குள்ள ஏரியில் மீன் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

தகவல் அறிந்த வனத்துறையினர் விசாரணை செய்து, அபராதம் விதித்த பின்பு இருவரையும் அனுப்பியதாக கூறப்படுகிறது.

ஊரடங்கு காலத்தில்சாமனிய மனிதர்களே தேவைக்காக வீட்டைவிட்டு வெளியேவர தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்கள் எவ்வாறு இவ்வளவு சுதந்திரத்துடன் உலாவருகிறார்கள் என்று பொதுமக்கள் கவலையினையும், கேள்வியினையும் தெரிவித்துள்ளனர்..