நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நடைமுறையில் இருக்கும் ஃபாஸ்டேக் முறையை தடை செய்ய வேண்டும் என கோரி தாக்கலான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது வழக்கறிஞர் கபிலன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவினில் பாஸ்டேக் மூலம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் பாஸ்டேக் கட்டண முறைக்கான அறிவிப்பாணைகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் தமது மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.இதை விசாரித்த நீதிபதிகள் மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரமில்லை என வழக்கினை தள்ளுபடி செய்தனர்