கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் பகுதி சர்ச்சில் பாதிரியாக இருந்தவர் ராபின், இவர் சில ஆண்டுகளுக்கு முன் சர்ச்சின் கட்டுப்பட்டில் இருந்த பள்ளியில் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், மாணவி கர்ப்பமாகி குழந்தை பெற்றார். ஆனால், சிறுமியின் தந்தைதான் பலாத்காரம் செய்ததாக கூறி தப்ப முயன்ற ராபினை, பின்னர் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து இவர் கேரள உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்த நிலையில், புதிய மனு ஒன்றையும் அளித்துள்ளார். அதில் பாதிக்கப்பட்ட மாணவியை தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.