சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் மற்றும் இறைச்சி, மீன் அங்காடிகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. தொற்றை தடுக்கும் வகையில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு கடைகளில், கிருமிநாசினி தெளிப்பு, சமூக இடைவெளி, நேரக் கட்டுப்பாடு உள்ளிட்ட விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.
மேலும், விதிமுறைகளை மீறும் கடைகளை, அபராதத்துடன் 14 நாட்களுக்கு மூடி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.