தனியார் கல்வி நிறுவனங்கள் 40 சதவீத கட்டணத்தை வசூலிக்கலாம்…

Share

தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணத்தில் 40 சதவீதத்தை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் முன் கட்டணமாக வசூலிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்விக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக தனியார் பள்ளிகள் வழக்கு தொடர்ந்தன. விசாரணையின் போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தனியார் கல்வி நிறுவனங்கள் 40 சதவீத கட்டணத்தை முன் கட்டணமாக அடுத்த மாதம் 31 தேதிக்குள் வசூலிக்கலாம் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.

35 சதவீத கட்டணத்தை 2 மாதங்களுக்கு பின் வசூலித்து கொள்ளலாம் என்றும் கட்டண நிர்ணய நடைமுறையை அடுத்த மாதத்தில் இருந்து 8 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரகூடாது, தனியார் பள்ளிகளுக்கு பாட புத்தகங்களை இலவசமாகவோ அல்லது குறைவான கட்டணத்திலோ வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் உள்ளிட்ட ஆணைகளை பிறப்பித்தார். இந்த ஆணைகள் மறு உத்தரவு வரும் வரை பொருந்தும் என கூறி வழக்கை அக்டோபர் 5 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


Share

Related posts

வடகொரியாவில் பரவிய கொரோனா வைரஸ்

Admin

ஜம்மு-காஷ்மீரிலிருந்து 10,000 வீரா்களைத் திரும்பப் பெறுகிறது மத்திய அரசு…

Admin

பாதுகாப்பை உறுதி செய்த பிறகே நீதிமன்றம் திறப்பு:தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தகவல்

Admin

Leave a Comment