ஊரடங்கில் இருந்து விடுதலை கிடைக்குமா?: 29-ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

Share

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் சில தளர்வுகளுடன் பிறப்பிக்கப்பட்ட 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் இருக்கிறது. 6-ம் கட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜூலை 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 29ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

ஊரடங்கை நீட்டிப்பதா? தளர்துவதா? என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share

Related posts

இந்து மதத்தை தவறாக பேசியதற்காக இயக்குனர் வேலு பிரபாகரன் கைது..

Admin

நாளை தமிழகத்தில் முழு ஊரடங்கு

Admin

தமிழகத்தில் மேலும் 6426 பேருக்கு கொரோனா

Admin

Leave a Comment