விண்ணிலும் தொடரும் பனிப்போர்..

Share

கொரோனாவுக்குப் பிறகு சீனா அமெரிக்கா இடையே பனிப்போர் உச்சத்தை எட்டியது அனைவரும் அறிந்ததே, இந்தநிலையில் தற்போது அடுத்தகட்டத்துக்கு நகர்ந்து விண்வெளி வரை சென்றுள்ளது. வரும் ஜூலை 30-ம் தேதி செவ்வாய்க்கிரகத்துக்கு ஒரு ரோவரை அனுப்பவுள்ளது அமெரிக்காவின் நாசா நிறுவனம். ஆனால் அதற்கு முன்பே இன்று தியான்வென் – 1 விண்கலத்தை சீனா விண்ணில் பறக்கவிட்டுள்ளது. சீனாவின் ஹைனன் தீவில் உள்ள வென்சாங் ஏவுதளத்திலிருந்து தியான்வென்1 விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சீனா, அமெரிக்கா நாட்டின் விண்கலங்களும் பிப்ரவரி 2021-ல் செவ்வாயில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்யும் என்று கருதப்படுகிறது. இதனால் இரு நாடுகளுக்குமான பனிப்போர் மோதல் விண்ணிலும் தொடங்கியுள்ளது சீனா இன்று அனுப்பியுள்ள தியான்வென் விண்கலம், ஆர்பிட்டர் , ரோவர் ஆகிய கருவிகளைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிப்ரவரி மாதத்திலிருந்து சுமார் 90 நாள்கள் செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றி ஆய்வு நடத்தும் என கூறப்படுகிறது.

தியான்வென் மட்டும் வெற்றிகரமாகச் செவ்வாயில் தரையிறக்கப்பட்டால் ஒரு பெரிய தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்’ என சீனா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனா அமெரிக்கா இடையே மூண்ட பனிப்போர் மண்ணில் தொடர்ந்த நிலையில் இனி விண்ணிலும் தொடருமோ என்ற பயத்தை சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ளது..


Share

Related posts

கொரோனா வைரஸ்:இஸ்ரேலுடன் இணையும் இந்தியா

Admin

டிவிட்டரில் அறிமுகமாக உள்ளது சந்தாமுறை..

Admin

அமைதியை நிலைநாட்ட நான் தயார்:டிரம்ப்

Admin

Leave a Comment