செமஸ்டர் தேர்வுகள் ரத்து : தமிழக அரசு அசராணை வெளியீடு

Share

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப் பட்டிருக்கிறது.

சென்ற வியாழன் அன்று அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதனையொட்டி இன்று அரசாணை வெளியாகியிருக்கிறது. அந்த அரசாணையில்,

1) மாணவர்கள், முன்சென்ற பருவத்தில் பெற்றிருக்கும் தேர்வு மதிப்பெண்களில் 30 சதவீதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
2) அக மதிப்பீட்டிலிருந்து நடப்பு பருவத்தின் 70 % மதிப்பெண்களைக் கணக்கில் எடுத்து கொள்ளப்பட வேண்டும்.
3) இவற்றின் அடிப்படையில், முதன்மை மற்றும் மொழி பாடங்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
4) செயல்முறை தேர்வு நடத்தப்படாமல் இருக்கும் நிலையில், ஆய்வகப் பதிவேட்டின் அடிப்படையிலே, மதிப்பெண்கள் வழங்கப்படும்.
5) முந்தைய பருவத்தில் தேர்ச்சி பெறாமல் இருந்தால் தேர்வுகளைப் பின்னர் எழுத வேண்டும்.

என்று கூறப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே ஒருமுறை இந்த் ஆறிவிப்பு வந்ததாக செய்திகள் வெளியாகிய நிலையில் , தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share

Related posts

தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகள் பரிந்துரைகள் வழங்கலாம்: தேர்தல் ஆணையம்

Admin

சேகர் ரெட்டி வழக்கு… முழு விபரம் என்ன?

Admin

மிரலும் வாகன ஓட்டிகள்: மிரட்டும் பெட்ரோல், டீசல் விலை…

Admin

Leave a Comment