இந்தியாவில் முதல் முறையாக ஆடி கார் நிறுவனம் மீது வழக்குப் பதிவு

Share

மாசினை குறைத்துக் காட்டும் கருவியை காரில் பொருத்தி ஏமாற்றியதாக, ஃபோக்ஸ்வேகன், ஆடி கார் தயாரிப்பு நிறுவனங்கள் மீது இந்தியாவில் முதல் முறையாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

டெல்லி அருகே உள்ள நொய்டாவை சேர்ந்த அணில்ஜிட் சிங் என்பவர், மாசு உமிழ்வை மறைப்பதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மீது புகார் அளித்தார்.

2018ஆம் ஆண்டில் 7 ஆடி கார்களை வாங்கியதாகவும் அப்போது மாசு உமிழ்வை மறைக்கும் கருவி ஏதும் பொருத்தப்பட்டுள்ளதா என விசாரித்ததாகவும், புகார்தாரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் மாசு உமிழ்வு தொடர்பான விதிமுறைகள் அவ்வளவு கடுமையானதாக இல்லைஎன்பதாலும் இந்தியா ஆடி கார்களுக்கு வளர்ந்து வரும் சந்தையாக இருப்பதாலும் அப்படிப்பட்ட கருவி ஏதும் பொருத்தவில்லை என்று நிறுவனத்தினர் பதிலளித்ததாகவும் புகார்தாரர் கூறியுள்ளார்.

சந்தையை கைப்பற்றும் நோக்கில் தரங்குறைந்த கார்களை விற்று வாடிக்கையாளர்களை ஏமாற்றியுள்ளதாகவும், உரிய அங்கீகாரம் பெற தவறான ஆவணங்களை கொடுத்து ஏமாற்றிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ள புகார்தாரர் இது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த புகாரின்பேரில், இந்தியா, ஜெர்மனியில் உள்ள ஆடி மற்றும் ஃபோக்ஸ்வேகன் தலைமை அலுவலக உயரதிகாரிகள் மீது, நொய்டாவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.


Share

Related posts

ராமர் கோவில் பூஜைக்கு அத்வானிக்கு அழைப்பு இல்லையா??

Admin

PUBG: பப்ஜிக்கு ஆப்பு… மத்திய அரசு அதிரடி

Admin

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று

Admin

Leave a Comment