போல்சனேரோவுக்கு3வதுபரிசோதனையிலும் கொரோனாஉறுதி

Share

பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோவுக்கு 3வது சோதனையிலும் கொரோனாஉறுதிசெய்யப்பட்டுள்ளது. போல்சனேரோ முதலில்கொரோனா ஒரு சிறிய காய்ச்சல், அதற்காக முகக்கவசம், ஊரடங்கு தேவையில்லை என கூறி இருந்த நிலையில் , பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோவுக்கு கடந்த 7 ஆம் தேதி நடந்த கொரோனா சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்ட அவர் கடந்த 15 ஆம் தேதி பரிசோதனை செய்ததிலும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், அதிபர் போல்சனேரோ 3-வது முறையாக நேற்று முன்தினம் பரிசோதனை செய்யபட்டத்தில், மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதியானது,

இது தொடர்பாக அதிபர் மாளிகை வெளியிட்ட தகவலின் படி போல்சனேரோ நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகவும், அவரை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


Share

Related posts

கந்த சஷ்டிக்கு அகைன்ஸ்ட்: போலீஸ் அரஸ்ட்

Admin

தமிழகத்தில் வெற்றிகரமாக 57 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை : அமைச்சர் விஜயபாஸ்கர்

Admin

சுகாதாரத்துறை செயலர் குடும்பத்துக்கு கொரோனா… மருத்துவமனையில் அனுமதி

Admin

Leave a Comment