கொரோனா ஊரடங்கு காரணமாக, கொகோ கோலா நிறுவனத்தின் விற்பனை 16 % அளவுக்குக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கொகோ கோலா நிறுவனத்தின் பெரிய சந்தைகளில் இந்தியாதான் ஐந்தாவது மிகப்பெரிய சந்தை இந்தியாவில் , ஏப்ரல் – ஜூன் காலகட்டத்தில் குளிர்பானங்கள் அதிகளவில் விற்பனையாகும்.ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாகவும் கொரோனா அச்சம் காரணமாக குளிர்பானங்கள் அருந்துவதை மக்கள் தவிர்த்து வருவதால்கோலா நிறுவனத்தின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டும் விற்பனை 12 % சரிந்துள்ளது.

மேலும் ஆசியா – பசிபிக் மற்றும் ஐரோப்பிய பகுதியில் குடிநீர் பாட்டில்கள் விற்பனை 24 % அளவுக்கு சரிந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும், கோடைக்காலத்தில் மட்டும் இந்தியாவில் ரூ. 20,000 கோடி அளவுக்கு குளிர்பானங்கள் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.