அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய மூன்று நாடுகளில் நேற்று ஒரே நாளில் மிக அதிக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 67,406 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டின் மொத்த பாதிப்பு 3,694,948 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 141,117 ஆகவும் உள்ளது.
அதேபோல் பிரேசிலில் ஒரே நாளில் 43,829 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதனால் அந்நாட்டின் மொத்த பாதிப்பு 2,014,738 , மொத்த பலி எண்ணிக்கை 76,822 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா, பிரேசிலை அடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 35,468 பேர் பாதிப்பு, இதனால் இந்தியாவின் மொத்த பாதிப்பு 1,005,637 , மொத்த பலி எண்ணிக்கை 25,609 ஆகும்.
மேலும் கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 1,39,30,155 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். வளந்த மற்றும் வளரும் நாடுகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில் கொரோனாவின் வீரியம் கண்டு உலக நாடுகள் கடும் அச்சத்தில் உள்ளது.