கொரோனாவுக்கு மருந்தே வராமல் போகலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோன வைரஸை குணப்படுத்த பல நாடுகளும் தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் தற்போதைய நிலையில் மாயாஜாலம் போல தீர்வைத் தருகிற ஒன்று இப்போது இல்லை. எப்போதும் அப்படி ஒன்று கிடைக்காமலும் போகலாம் என தெரிவித்தார்.
அதாவது தடுப்பு மருந்தைக் குறிப்பிடுகிறாரா? அல்லது குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்படாமலே போய்விடலாம் என்று குறிப்பிடுகிறாரா என்று தெரியவில்லை.
இந்த வைரஸை எதிர்க்க தனிமனித இடைவெளி முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி கழுவுவது, பாதுகாப்பாக இருமுவது ஆகிய நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.