கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பிய தனது அம்மாவை நடனமாடி வரவேற்றுள்ளார் மகள்.
இந்தியாவில் அதிகளவில் கொரோனா பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு கொரோனா பாதித்த பெண் ஒருவர் சிகிச்சையில் குணமாகி வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அவரை சிறப்பாக வரவேற்கும் விதமாக அவரது மகள் தெருவில் நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மகளின் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட அந்த தாயும் ஒரு கட்டத்தில் நடனமாடத் தொடங்குகிறார். இருவரும் நடனமாடும் வீடியோ சமூகவலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.