கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி, ‘கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்ட குழுவினரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழகம் முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் ஈ.வெ.ரா., ஆதரவாளர்களுக்கும், ஆர்.எஸ்.எஸ்., ஆதரவாளர்களுக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டது. இந்நிலையில், கோவை சுந்தராபுரத்தில் உள்ள ஈ.வெ.ரா., சிலை மீது, காவி சாயம் பூசப்பட்டது.

திராவிடர் கழகத்தினரால் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த சிலை மீது, காவி சாயம் பூசப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
