டேய் பாலு.எழுந்து வாடா..: கண் கலங்கிய இயக்குநர் பாரதிராஜா

Share

இயக்குநர் பாரதிராஜா, எஸ்.பி.பி விரைவில் நலம்பெற வேண்டும் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது பதிவில் என் நேசத்திற்கும் பாசத்திற்கும் உரிய பாலு. டேய் பாலு.எழுந்து வாடா.. வாடா என்ற உரிமையை நீ எனக்கும், நான் உனக்கும் கொடுத்திருக்கிறோம்.நீ ஃபியட் கார் வைத்திருந்தாய். அதை நீயே ஓட்டுவாய். உன் கூடவே நான் வருவேன். நீ தூங்கிவிடக்கூடாது என்பதற்காக நான் கதை சொல்லிக்கொண்டே வருவேன். பொன்மாலைப் பொழுது நீ பாடலாம். ஆனா, உனக்கு பொன்மாலைப் பொழுது வரக்கூடாது; பொன் காலைப் பொழுதுதான் வரவேண்டும்.

பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு அத்தனையும் உண்மையென்றால் நீ வருவாய்…எங்களோடு மீண்டும் பழகுவாய்…இன்னும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடுவாய். பாலு வந்திருடா.” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்


Share

Related posts

வெப்சைட் மூலம் சிறப்பாக இயங்கும் தடை செய்யப்பய சீன ஆப்ஸ்கள்

Admin

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு

Admin

இராணுவத்தில் பெண்கள் இனி நிரந்தரமாகப் பணிபுரியலாம்… நிரந்தர ஆணையம் அமைப்பு

Admin

Leave a Comment