கர்நாடகா மற்றும் பெங்களூரில் நாளை முதல் ஊரடங்கு தளர்த்தபடுவதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளம் மூலம் பேசிய எடியூரப்பா கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு தீர்வாகது என்று தெரிவித்துள்ளார்.
மாநிலத்திற்கு பொருளாதார வளர்ச்சி முக்கியம் என்பதால் மக்கள் மீண்டும் பணிக்கு திரும்புவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் தான் கர்நாடக மாநிலத்தில் கொரோனா அதிகரித்தாக எடியூரப்பா குற்றம் சாட்டியூள்ளார்.