ஃபேஸ்புக் அவ்வளவு முக்கியம்னா வேலைய ராஜினாமா பண்ணுங்க: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

Share

பேஸ்புக், ட்ரூகாலர் மற்றும் இன்ஸ்டாகிராம் முதல் பப்ஜி மொபைல் போன்ற கேம்கள் மற்றும் டிண்டர் போன்ற டேட்டிங் ஆப்ஸ், அத்துடன் டெய்லி ஹன்ட் மற்றும் அனைத்து ‘தனியார் வலைப்பதிவுகள்’ உட்பட மொத்தம் 89 செயலிகளை தனது வீரர்கள் டெலிட் செய்ய வேண்டும் என்று இந்திய ராணுவம் சில தின்ங்களுக்கு முன்பு அறிவித்தது.

தகவல்கள் சார்ந்த கசிவை தடுப்பதற்காக இந்த செயலிகளை நீக்க வேண்டும் என்று இந்திய ராணுவம் இந்த முடிவை எடுத்தது.

சமீபத்தில் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட 59 சீன ஆப்ஸ்களே ஒரு பெரிய பட்டியலாக இருக்கும் நிலையில், இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள இந்த பட்டியல் இன்னும் பெரியது, மேலும் இது சீனாவிலிருந்து வரும் ஆப்களை மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை, மற்ற நாடுகளின் ஆப்களையும் பட்டியலிட்டுள்ளது.

இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் லெப்டினண்ட் கர்னல் சௌத்ரி. இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம், ஃபேஸ்புக் உங்களுக்கு அவ்வளவு முக்கியமானதாக இருந்தால், வேலையை விட்டு விடுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு கருதி ஒரு முடிவு எடுக்கப்படுகிறது. நீங்கள் அந்த அமைப்பின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் நீங்கள் உங்கள் முடிவை எடுக்கலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Share

Related posts

சிங்கப்பூர் தேர்தல்: வெற்றி பெற்ற லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

Admin

M.Phil படிப்புகள் இனி கிடையாது… இன்னும் என்னென்ன?

Admin

நாளை இலங்கையில் பொதுத்தேர்தல்…

Admin

Leave a Comment