ரஜினிகாந்த் இபாஸ் வாங்கினாரா?: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பதில்

Share

கொரோனா ஊரடங்கு காலத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து முகக்கவசத்துடன் லம்போர்கினி கார் ஓட்டிச் செல்லும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது.கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு ரஜினிகாந்த் ஓய்வுக்காக சென்றுள்ளார் என்றும், அவருடன் சவுந்தர்யா அவரது கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோர் சென்றிருந்தனர்

.

இந்த நிலையில் ரஜினிகாந்த் கேளம்பாக்கத்திற்கு செல்லஅனுமதி பெற்றாரா என்ற கேள்வியினை பத்திரிக்கையாளர்கள்
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் முன்பு கேட்டனர் இதற்கு பதில் அளித்த அவர் ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான அனுமதி பெற்றாரா? என்பது குறித்தும், திரும்ப வர மீண்டும் முறையான பாஸ் பெற்று வந்தாரா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்றார்.மேலும், சென்னைக்கு வர விரும்பும் நபர்கள் முறையான ஆவணங்களுடன் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம்.என்றும் கூறியுள்ளார்


Share

Related posts

தமிழகத்தில் ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ்

Admin

கொரோனா – உலக அளவில் பாதிப்பு 1.28 கோடியை தாண்டியது

Admin

பெங்களூரு வன்முறை குறித்து நீதி மன்ற விசாரணை தேவை: தேவகவுடா

Admin

Leave a Comment