EIA 2020: கால அவகாச நீட்டிப்புக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு

ஆப்
Share

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவில் கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள் குறித்து மக்கள் கருத்துகளை வழங்கும் கால அவகாசத்தை ஆகஸ்ட் 11 வரை நீட்டித்தும், மாநில மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 30 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

ஆகஸ்ட் 11ஆம் தேதி என்று விதிக்கப்பட்டிருக்கும் காலக்கெடுவே போதாது என்று சூழலியலாளர்கள் குரல் எழுப்பி வரும் வேளையில், இன்று டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு பதிவு செய்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவான, மாநில மொழிகளில் EIA 2020 க்கான வரைவை மொழிபெயர்க்க வேண்டும் என்பது இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share

Related posts

கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு ரத்து:முதல்வர் அறிவிப்பு

Admin

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை: யுஜிசி பதில்

Admin

மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகானுக்குகொரோனா

Admin

Leave a Comment