செப்.17ல் இன்ஜினியரிங் கவுன்சலிங்: தரவரிசை பட்டியல் செப்.7ம் தேதி வெளியீடு

Share

சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் பொறியியல் (இன்ஜினியரிங்) கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருதால் விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே பெற திட்டமிடப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 16ம் தேதி வரை பெறப்படும் என்றும், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சலிங் செப்டம்பர் 10 மற்றும் 17ம் தேதிகளில் தொடங்கும் என்றும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். அண்ணா பல்கலைக் கழகம், அரசு பொறியியல் கல்லூரிகள், இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் பிஇ, பிடெக் பட்டப் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.


Share

Related posts

கோவையில் 3 நாட்களுக்கு ஊரடங்கு..

Admin

தமிழில் பேச அனுமதி இல்லை: தொழிற்சாலை மேலாளர் நிபந்தனையால் போராட்டம்

Admin

அயோத்தியும் இந்தியாவில் இல்லை. ஸ்ரீராமனும் இந்தியாக்காரர் இல்லை: நேபாள பிரதமர் பேச்சு

Admin

Leave a Comment