ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியானது 2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை புதன்கிழமை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைக்க உள்ளார்.
இது குறித்து முன்னதாக தெரிவித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையை தொடந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்மா வங்கிகள் தொடாங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் எனவும், இதன் மூலம் பலரை நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பாக காப்பாற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.