பிரான்சின் தலைநகரான பாரிசில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பாரிஸ் பிளேஜஸ் என்ற நிகழ்ச்சிகொண்டாடப்படும். பாரிசில் உள்ள புகழ்பெற்ற சீன் ஆற்றின் நடுவே தற்காலிக கடற்கரை உருவாக்கப்பட்டு கொண்டாடப்படும். இந்தாண்டு பிளேஜஸ் நிகழ்ச்சியை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்ஒரு பகுதியாக சீன் ஆற்றின் நடுவில் மிதக்கும் தியேட்டர் ஒன்று வரும் 18 ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு சுர் எல் யோ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் பொருள் தண்ணீரில்சினிமா என்பதாகும்.

கொரோனா தொற்று பற்றிய கொரோனா ஸ்டோரி என்ற குறும்படமும், இரண்டாவது படமாக நீச்சல் அணியை துவங்கும் ஆண்கள் குழுவை பற்றிய2018 ம் ஆண்டு வெளியான நகைச்சுவை படமான லு, கிராண்ட் பெயின் என்ற படமும் திரையிடப்படுகிறது.