கட்டுபாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாம்- கர்நாடக முதல்வர் அறிவிப்பு…

Share

நாடு முழுவதும் வருகிற 22-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கர்நாடக மாநிலத்தின் தலை நகராக உள்ள பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று ஏற்கனவே மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில் “கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும், மக்களின் விருப்பத்திற்காக விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாட அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது.

கொரோனாவுக்கு மத்தியிலும் மக்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து, அரசின் உத்தரவுகள் மற்றும் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடித்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும்படி கேட்டுக் கொள்கிறேன்,“ என்று கூறி உள்ளார்.

இதன் காரணமாக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வருகிற 22-ந் தேதி விநாயகர் சதுர்த்தி எளிமையாக கொண்டாடப்பட இருக்கிறது.


Share

Related posts

பிறந்தநாள் வாழ்த்துகள் துல்கர்…

Admin

இப்படிதான் சத்யராஜ்க்கு பாகுபலி பட வாய்ப்பு கிடைத்ததா!

Admin

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் இந்த வாரம் தொடங்குகிறது பரிசோதனை…

Admin

Leave a Comment