மத்தியப்பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் இன்று லக்னோவில் இருக்கும் மருத்துவமனையில் காலமானார்.
காய்ச்சல், சிறுநீர் கோளாறு ஆகிய காரணங்களால் லக்னோவில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தார். கடந்த ஜூன் 11 ஆம் தேதியில் இருந்து சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று உயிரிழந்தார் என்பதை, இவரது மகன் அஷுதோஷ் டாண்டன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.