மலையாள படங்களில் மட்டும் இன்றி தமிழ் பட துறையிலும் பிரபலமான மற்றும் திறமையான இளம் நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான். மிக சிறந்த நடிகரின் மகனான துல்கர் சல்மான் தனது ரசிகர்களால் டி.க்யூ என அழைக்கப்படுகிறார். ஜூலை 28 ஆன இன்று பிறந்த நாள் கொண்டாடும் துல்கர்க்கு, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்..

துல்கரின் அடுத்த பெரிய படம் ‘குருப்’, ரமலான் மற்றும் ஈத் பண்டிகை காலங்களில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட வேண்டியிருந்தது.

‘குருப்’ படத்தை ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார், இதற்கு முன்பு துல்கர் சல்மானுடன் ‘செகண்ட் ஷோ’வில் பணியாற்றியவர். இந்த படத்தை எம் ஸ்டார் என்டர்டெயின்மென்ட் உடன் வேஃபெரர் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

நடிகரின் பிறந்தநாளைக் கருத்தில் கொண்டு, படத்திலிருந்து ஒரு சிறப்பு கண்ணோட்டத்தை வெளியிட்டு, துல்கரை மட்டும் இன்றி அவர் ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்த குழு முடிவு செய்திருந்தது. இந்த வீடியோ மூலம் அவர் சிறந்த மற்றும் மாஸ் நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
இப்போது, மகாநதி / நாடிகையர் திலகம் தயாரிப்பாளர்கள் நடிகரின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு அற்புதமான அறிவிப்பைக் வெளியிட்டுள்ளானர்.
துல்கர் விரைவில் ஒரு பன்மொழி படத்தில் ராணுவ வீரராக நடிக்கவுள்ளார், வைஜயந்தி மூவிஸ் வழங்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கவுள்ளார்.