நான் தலித் அல்ல- ரித்விகா பதில்

Share

சமூகவலைத்தளத்தில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசிய ஒருவருக்குப் பதில் கொடுக்கும் விதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ரித்விகா. அதில் தலித்தாக இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். என்ன செய்ய? அப்பாக்கியம் நானடையேன். நானும் அடக்குமுறைகள் செய்த குற்றமிகு ஆதிக்க சாதிகளுள் பிறந்தவள் தான். வருந்துகிறேன். இனியாவது சாதிகளற்ற சமூகமாக, மனிதர்களாக வாழ முயற்சிப்போம். நிற்க. ஒரு வகையில் நானும் தலித் தான். ஒடுக்கப்பட்டோர் அனைவரும் தலித் எனின் பெண்ணாகிய நானும் தலித் தானே. காலங்காலமாக ஆண்களால் ஒடுக்கப்பட்டோர் தானே. ஆம் தலித். எம்மை தலித்தாக்கிய பிழையும் பாவமும் தங்கள் ஆணினத்தையே சாரும். மற்றபடி எம் அழகைப் பாராட்டியதற்கு நன்றி. என்று கூறியுள்ளார்.

2013-ல் பரதேசி படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான ரித்விகா. 2018-ல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக கவனம் ஈர்த்தார். இவரது நடிப்பில் கடைசியாக வால்டர் படம் வெளியானது.


Share

Related posts

கொரோனா தமிழகத்தில் புதிய உச்சம்

Admin

எனக்கு எதிராக சதி நடக்கிறது: ஏ.ஆர்.ரஹ்மான் ஆதங்கம்

Admin

தமிழத்தில் புதிய தொழில் நிறுவனங்கள்: புதிய வேலை வாய்ப்புகள்

Admin

Leave a Comment