உலகம் முழுவதும் கொரோனா பதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாகி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் அதிகரித்தும் வரும் நோய் தொற்றை கட்டுப்படுத்த அமெரிக்காவின் உயர் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி பாசி, “பொதுமக்கள் முகக்கவசம் அணிய மத்திய மற்றும் மாகாண அரசுகள் கட்டாயப்படுத்த வேண்டும். முகக்கவசம் அணிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. நாம் அனைவரும் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்”என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க அமெரிக்க மக்களை முகக்கவசம் அணியுமாறு ஒருபோதும் உத்தரவிட மாட்டேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின் போது டிரம்ப் இதனை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் ” கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அமெரிக்க மக்களை முகக்கவசம் அணியுமாறு உத்தரவிட மாட்டேன். முகக்கவசம் அணிவது குறித்து தேசிய அளவில் ஆணை பிறப்பிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரம் இருக்க வேண்டும்” என கூறினார்.