ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து ஐபிஎல் போட்டிகளும் நடக்க வாய்ப்பு இருப்பதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து மார்ச் 29ஆம் தேதி நடக்க இருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. இந்தியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை.

ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடக்கலாம் என செய்தி வெளியான நிலையில் தற்போது,ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 26 முதல் நவம்பர் 7 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக ,ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி உண்டா? என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை..