பத்திரிகையாளருக்கே இந்த நிலை? சாமானிய மக்கள்- பிரியங்கா கேள்வி

Share

காசியாபாத்தில் பத்திரிகையாளர் மீதான தாக்குதலுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் பத்திரிகையாளர் ஒருவரை மர்ம நபர்கள் தாக்கியத்துடன் துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசியாபாத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி என்பவர் தனது மகள்களுடன் விஜய் நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்,அப்போது மர்ம நபர்கள் சிலர் விக்ரமை வழிமறித்து தாக்கியும் அவரை துப்பாக்கியால் சுட்டும் உள்ளனர். இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இதுவரை 9 பேரை கைது செய்துள்ளதாகவும், தெரிவிக்கபட்டுள்ளது.துப்பாக்கியால் சுடப்பட்டபத்திரிகையாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனத்தை பதிவும் செய்து வரும் நிலையில்,காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

தனது டிவிட்டர் பதிவில் காசியாபாத்தில் பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தை வைத்து பார்த்தால் ஒட்டுமொத்தமாக மாநிலத்தின் நிலைமையை அறிய முடியும். பத்திரிகையாளர் போலீசில் புகார் கொடுத்ததால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளருக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்கள் எப்படி தங்களை பாதுகாப்பாக உணர முடியும்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Share

Related posts

ஈரான் தளபதி குறித்து சொன்னவருக்கு தூக்கு தண்டனை

Admin

கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு ஆர்ஞ்அலாட்..

Admin

குளித்தலை எம்.எல்.ஏ. ராமருக்கு கொரோனா

Admin

Leave a Comment