ஜார்க்கண்ட் மாநிலம், சிங்பம் மாவட்டத்தின் பெர்கேலா வனப்பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுடன் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள அரசு வனத்துறை அலுவலக கட்டிடத்திற்குள் நுழைந்த அவர்கள், அங்கிருந்த அரசு ஊழியர்களை விரட்டிவிட்டு 12 வனத்துறை அலுவலகங்களை ஒன்றன் பின் ஒன்றாக வெடி வைத்து தகர்த்தனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களை தேடும் பணியும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.