இன்று அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி

Share

முன்னாள் குடியரசு தலைவர், டாக்டர் அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று இந்திய மக்கள் மத்தியில் அனுசரிக்கப்படுகிறது.

ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம், கடந்த 2015 ஆம் ஆண்டு மேகாலயாவில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் தருணத்திலேயே மரணமடைந்தார்.

இந்திய நாட்டின் பதினோராவது குடியரசு தலைவர், டி.ஆர்.டி.ஓ, ஐ.எஸ்.ஆர்.வோ என்னும் இரண்டு அமைப்புகளிலும் விண்வெளி விஞ்ஞானியாக செயல்பட்டவர், ஏவுகணை மனிதர். பொக்ரான் அணுகுண்டு சோதனையில் இவர் பங்கு மிகவும் பாராட்டத்தக்கது. இந்தியா 2020 ஆம் ஆண்டுக்குள் வல்லரசாகும் என்ற கனவை இந்திய இளைஞர்கள் மத்தியில் விதைத்து அக்னிச் சிறகை விரியச் செய்தவர்.

அவருடைய நினைவு தினமான இன்று, ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அவருடைய நினைவில்லம் வண்ண விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் தங்களுடைய ட்விட்டர் பக்கங்களில் அவர் நினைவஞ்சலியைப் பகிர்ந்து வருகின்றனர். #11thpresidentofIndia #APJAbdulKalam #PeoplesPresident #MissileManOfIndia போன்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. மற்ற வருடங்களைப்போல கூட்டுப் பிரார்த்தனை நடத்த முடியாமல் போனாலும், அவருடைய நினைவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும் இந்திய இளைஞர்கள் மனதில் அவர் கனவு சுடர்விடும்.

“உறக்கத்தில் வருவதல்ல கனவு, நம்மை உறங்கவிடாமல் செய்வதே கனவு” என்று கனவுக்குக் கூட மகத்தான சக்தியை உணர்த்திவிட்டுச் சென்ற அவுல் பகீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாம் நினைவைப் போற்றுவோம்…


Share

Related posts

கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு ஆர்ஞ்அலாட்..

Admin

இன்று தொடங்குகிறது உத்தர பிரதேச சட்டப் பேரவை கூட்டத் தொடா்…

Admin

அமர்நாத் யாத்திரை ரத்து: ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு

Admin

Leave a Comment