விண்ணில் பாய்ந்தது அமீரகத்தின் முதல் விண்கலம்

Share

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் விண்கலம் தனது செவ்வாயை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் காலடி வைத்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் என்று பெயரிடப்பட்ட விண்கலம் ஜப்பானில் உள்ள அனேகாஷிமா ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 6.58 மணிக்கு ஏவப்பட்டது. மிட்சுபிஷி நிறுவனத்தின் ஹெச் 2 ஏ ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த விண்கலம் வெண்ணிறப் புகையை உமிழ்ந்தபடி விண்ணை நோக்கிப் பாய்ந்தது.

பூமியில் இருந்து ஹோப் விண்கலம் மொத்தம் 49 கோடியே 35 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு செவ்வாய் கிரகம் நோக்கி பயணம் செய்ய உள்ளது. இதற்காக பூமியில் இருந்து ராக்கெட்டானது மணிக்கு 34 ஆயிரத்து 82 கிலோ மீட்டர் செலுத்தப்பட வேண்டும். முன்னதாக கடந்த 14ம் தேதி ஏவப்பட இருந்த ஹோப், மோசமான வானிலை காரணமாக ஏவுவது தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share

Related posts

கேரளா: பாஜகவினர் மீது தாக்குதல் நடத்திய போலீஸ்

Admin

லெபனான் வெடிவிபத்து:பதவி விலகினார் பிரதமர் ஹசன் தியாப்

Admin

தங்கைக்காக 90 தையல்கள்: சிறுவனுக்கு ஷீல்டை அனுப்பிய கேப்டன் அமெரிக்கா

Admin

Leave a Comment